ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாகும் போது தாம் அதிகாரத்தில் இல்லை – பிரான்ஸ் அதிபர்

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தேசிய அரசியலில் பெரும் பிரச்னையை கிளப்பியுள்ளது. பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹோலாந்தே வெளியிட்ட கருத்தும் இந்த விவகாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பிரான்ஸ் அரசு அளித்துள்ள விளக்கத்தில், ரஃபேல் விவகாரத்தில் இந்தியாவில் எந்த நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற முடிவை பிரான்ஸ் அரசு எடுக்கவில்லை. இது பிரான்ஸ் வர்த்தக நிறுவனங்களின் தனிப்பட்ட உரிமை. அதில் அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போதைய அதிபர் இம்மானுவேல் மேக்ரானிடம், ரஃபேல் ஒப்பந்தம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு நேரடியாக பதிலளிக்காத மேக்ரான், ஒப்பந்தம் கையெழுத்தாகும் போது தாம் பிரதமர் பொறுப்பில் இல்லை என தெரிவித்தார். ரஃபேல் ஒப்பந்தம் இந்தியா, பிரான்ஸ் இடையேயான ராணுவம், பாதுகாப்பு உள்ளிட்ட விரிவான கட்டமைப்பில் ஒரு அங்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version