யு.ஜி.சி.யை கலைக்க வேண்டாம் ப்ளீஸ் – முதலமைச்சர்

பல்கலைக்கழக மானியக்குழுவைக் கலைக்கக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

பல்கலை மானிய குழுவை கலைக்கக்கூடாது என்றும் அதற்கு பதில் புதிய அமைப்பை ஏற்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளார். தேசிய உயர்கல்வி ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உயர்கல்வி ஆணையம் அமைக்கப்பட்டால், பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதி 100 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக குறையும் என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். யுஜிசி எந்த புகாருமின்றி, கடந்த 1956ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும்நிலையில், அதனைக் கலைக்கும் அவசியம் எழவில்லை என்றும் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version