பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ அமைப்புடன் மோடியும் அமீத் ஷாவும் கூட்டணி வைத்துள்ளதாக காங்கிரஸ் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா,
பதான் கோட் விமானப்படைத் தளம் மீது ஐ.எஸ்.ஐ. தூண்டுதலின் பேரில்தான் தாக்குதல் நடந்தது. ஆனால் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் ஐ.எஸ்.ஐ. பிரிவினரையும் சேர்த்து ஆய்வு நடத்திட மோடி அரசு பதான் கோட்டுக்கு அவர்களை வரவழைத்ததாக குற்றம் சாட்டினார்.
ஐ.எஸ்.ஐ. அமைப்பின் முன்னாள் தலைவர் ஆசாத் துரானி மோடிதான் இந்திய பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று கூறி இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டிய அவர் ,பிரதமர் மோடியும், பா.ஜனதாவின் தலைவர் அமித்ஷாவும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் மெகா கூட்டணி வைத்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த மெகா கூட்டுக்கு இதைவிட வேறு பெரிய சாட்சியம் என்னவேண்டும்?… என்று கேள்வி எழுப்பினார். எனவே நாட்டு நலன்கள் மற்றும் பாதுகாப்பில் மோடி அரசு நாட்டுக்கு துரோகம் இழைத்துவிட்டது. இதற்காக நாட்டு மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்கவேண்டும் என்றார்.
துல்லிய தாக்குதல் நடத்தியதை பெருமையாக கூறும் மோடி, இதன் மூலம் எவ்வித அரசியல் ஆதாயத்தையும் அவரோ, அவருடைய கட்சியோ பெற முடியாது என்று ரந்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.
Discussion about this post