10 வயது முதல் 50 வயதுடைய பெண்கள் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபடுவதற்கு தடை உள்ளது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதியளித்தது.
இதற்கு எதிராக திருவனந்தபுரம், கொச்சி ஆகிய இடங்களில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தியதோடு சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சபரிமலை கோவில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதில்லை என்று தெரிவித்துள்ள அவர், சபரிமலை கோவிலில் பெண்கள் வழிபாடுவதற்கான வசதிகள் மற்றும் பாதுகாப்புகள் குறித்து உறுதி செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.