மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைவு

கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், அங்குள்ள அணைகள் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால், நடப்பாண்டில் மேட்டூர் அணை 3வது முறையாக முழு கொள்ளவை எட்டியது. தற்போது, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையளவு குறைந்து உள்ளதால், கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 45 ஆயிரம் கனஅடியில் இருந்து, 40 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. இதனால், அணையில் இருந்து 35 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனிடையே ஓகேனக்கலுக்கு வரும் நீர்வரத்தும் குறைந்துள்ளது. இருப்பினும், ஒகேனக்கலில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 46வது நாளாகவும், பரிசல்களை இயக்க 14வது நாளாகவும் தடை நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version