மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ள நிலையில், பாசனத்திற்காக 22 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
தென்மேற்கு பருவமழையின் தீவிரம் குறைந்து விட்டதால், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது.
இந்நிலையில் தற்போது நீர்வரத்து சற்று அதிகரித்து காணப்படுகிறது. நேற்று 8 ஆயிரத்து 182 அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 8 ஆயிரத்து 483 அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 22 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 111 புள்ளி 42 அடியாகவும், நீர் இருப்பு 80 புள்ளி 44 டிஎம்சியாகவும் உள்ளது. ஒகேனக்கல் பகுதிக்கு விநாடிக்கு 8 ஆயிரத்து 500 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.