கருணாநிதியின் குடும்ப சொத்து விவரங்கள் குறித்து பதில் அளிக்க முடியுமா என்று மு.க. ஸ்டாலினுக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் சவால் விடுத்துள்ளார்.
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், முதலமைச்சர், அமைச்சர்கள் மீது உண்மைக்கு புறம்பாக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் சுமத்தி வருவதாக கண்டனம் தெரிவித்தார்.
அவதூறு பேச்சுக்களை நிறுத்திக் கொண்டு, பண்பட்ட அரசியல் பணிகளை ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும் அவர் கேட்டுக் கொண்டார். கருணாநிதியின் மகன்கள், மகள்கள் உள்ளிட்டோரின் சொத்து விவரங்களை வெளியிட அவர் தயாரா என்றும் அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பினார்.
Discussion about this post