நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில், அவர்களை மகிழ்விக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது முதுமலை புலிகள் காப்பகத்தில் வெளிப்பகுதியில் மட்டும் சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்தநிலையில், முதுமலை பகுதியில் சூழல் சுற்றுலா திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதற்காக 8 புதிய வழித்தடங்கள் உருவாக்கப்பட உள்ளன. புலிகள் காப்பகத்திலுள்ள பிரதான சாலைகளுக்கு இருபுறமும் சாலையிலிருந்து 30 மீட்டர் தூரம் வரையுள்ள புதர்களை அகற்றி புல்மேடுகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சூழல் சுற்றுலாவுக்கு என ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வசதியும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.