தமிழகத்தில் மரங்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்னர்.
தருமபுரி மாவட்டம் ஆரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் நல்லசாமி, கர்நாடக மாநிலத்தில் மரங்களைப் பாதுகாக்க சட்டம் உள்ளதுபோல், தமிழகத்தில் பனை மரம் உள்ளிட்ட அனைத்து வகை மரங்களையும் சேதப்படுத்துதல், வெட்டுவதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
தற்போது, பனை மரங்களில் இருந்து அதன் பழம் கீழே விழுவதற்கான பருவ காலம் நடைபெறுவதால், இந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் உள்ள தொழிலாளர்களை பயன்படுத்தி, பனை விதைகளை ஏரிகள், குளம், குட்டைகள், நீர் நிலைகளின் கரைகளில் நடவு செய்ய வேண்டும் என்றும் நல்லசாமி வலியுறுத்தினார்.