மதுரை தமுக்கம் மைதானத்தில் தமிழக அரசின், விவசாய தொழில்நுட்ப கண்காட்சி 4 நாட்கள் நடக்கிறது.
மதுரை தமுக்கம் மைதானத்தில் விவசாய தொழில் நுட்பக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. 24 ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் விவசாயிகளின் பல்வேறு தயாரிப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக வெட்டி வேர் ,வாசனைத் திரவியங்கள், மூலிகை குளிர்பானம், மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகள், மற்றும் சாக்லேட் என பல தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த விவசாயிகள், இந்த கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கண்காட்சி, விவசாயம் மற்றும் சார்புத் துறையில் அதிகப்படியான பயனாளிகளை உருவாக்கும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது. வேளாண் துறையின் தேவைகள் மற்றும் சவால்களைக் கண்டறிந்து விவசாயிகளுடன் இணைந்து தீர்வு கண்டறிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு, விவசாயம் சார்ந்த துறையில் எடுக்கக் கூடிய அனைத்து முயற்சிகளையும் தமிழக விவசாயிகளுக்குக் கொண்டு செல்வதற்காகவும் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
Discussion about this post