தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் 13வது புத்தகத் திருவிழா மதுரையில் நடைபெற்றது. தமுக்கம் மைதானத்தில் 31ம் தேதி தொடங்கிய திருவிழாவில், 250 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்று இருந்தன. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களிலிருந்து இருந்து வந்தவர்கள் புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். காந்தியடிகளின் சத்தியசோதனை, அப்துல் கலாமின் அக்னிச்சிறகுகள் புத்தகங்கள் அதிக அளவில் விற்பனையாகியுள்ளன. பெரியார், அண்ணா மற்றும் புரட்சியாளர்கள் சேகுவேரா பற்றிய நூல்களும் விற்றுத் தீர்ந்தன. நேற்றுடன் புத்தக திருவிழா நிறைவு பெற்ற நிலையில், 3 கோடி ரூபாய்க்கு நூல்கள் விற்பனை ஆனதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
Discussion about this post