மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை உறுதி – அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் எந்தத் தடையும் மாற்றமும் இல்லை என்று, சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மதுரையை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வெளியானது.

இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜே.பி நட்டாவை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் வரும் 9ம் தேதி சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறினார்.

இந்தச் சந்திப்பின் போது எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்த கோரிக்கை வைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிபடத் தெரிவித்தார்.

Exit mobile version