கன்னியாகுமரியில் குற்றங்கள் குறைந்து மக்கள் அமைதியாக வாழ வேண்டி, காவல்துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் முருகனுக்கு காவடி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தின் கடைசி வெள்ளியன்று குற்றங்கள் குறைந்து மக்கள் அமைதியாக வாழ வேண்டி, காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் முருகன் கோவிலுக்கு காவடி ஏந்திச் செல்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவடி ஏந்தி, பொதுப்பணித் துறை அலுவலகத்திலிருந்து, மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாகச் சென்றனர். தமிழகத்திலேயே காவல்துறை அதிகாரிகள் காவடி ஏந்திச் செல்வது தக்கலையில் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.