பெட்ரோல், டீசல் விலை உயர்வின்போது 1 லட்சம் கோடியை மக்களிடம் இருந்து பிடுங்கிவிட்டதாக சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதாலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதாலும் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலையில் ரூ.2.50 குறைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை சிவசேனா விமர்சனம் செய்துள்ளது.
சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழான சாம்னாவில்,”மத்திய அரசு விலைக் குறைப்பை மிகவும் தாமதமாக அறிவித்திருக்கிறது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தினந்தோறும் ஏறிக்கொண்டிருந்த பெட்ரோல், டீசல் விலையால் நாட்டின் கஜானாவில் ரூ.1 லட்சம் கோடி சேர்ந்திருக்கிறது என்றும் இது மக்களிடமிருந்து மத்திய அரசு பிடுங்கிய பணம்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Discussion about this post