ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்டு இருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் ரூ.3,500 கோடியை முதலீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சிபிஐ, அமலாக்கப்பிரிவு சார்பில் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று நடைபெற்ற விசாரணையின் போது சிதம்பரம் ஆஜரானார். பின்னர் விசாரணை நவம்பர் 1ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை நவம்பர் 1-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.