பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க அமைச்சரவை பரிந்துரை!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், இதுகுறித்து விவாதிக்க முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கியது.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்கக் கோரி ஆளுநருக்கு பரிந்துரை செய்ய அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித் தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என பெயரிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.

Exit mobile version