பெரியார் சிலை மீது காலணி வீச்சு – வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் சட்டம்

தந்தை பெரியார் சிலை மீது காலணி வீசிய, வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. 

தந்தை பெரியார் பிறந்த நாளான கடந்த 17 ஆம் தேதி, சென்னை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு பல்வேறு கட்சிதலைவர்களும் மாலை அணித்து மரியாதை செலுத்தி வந்தனர். அப்போது, பெரியார் சிலை மீது, பாஜக வழக்கறிஞர்ஜெகதீசன், காலணி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பெரியார் ஆதரவாளர்கள், ஜெகதீசனை தாக்க முயன்றனர். 

இதனையடுத்து ஜெகதீசனை, சுற்றிவளைத்த காவல்துறையினர் உடனடியாக கைதுசெய்தனர். இதனிடையே, வன்முறையைத் தூண்டும் விதமாகப் பெரியார் சிலை மீது காலணி வீசப்பட்டதற்கு, பல்வேறுஅரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இந்நிலையில், கைதான வழக்கறிஞர் ஜெகதீசன் மீதுகுண்டர் சட்டம் பாய்ந்ததாக சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்  தெரிவித்தார். இதற்கான, ஆணையையும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பிறப்பித்துள்ளார்.

Exit mobile version