பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்க அரசும், தனியார் அமைப்புகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி சேலத்தில், தனியார் நிறுவனம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து பெண் குழந்தைகளை பேணிக் காப்பதற்கான விழிப்புணர்வுப் பேரணியை நடத்தினர். மாவட்ட ஆட்சியர் ரோகிணி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர் மழையையும் பொருட்படுத்தாமல் துவங்கிய பேரணி, காந்தி விளையாட்டு மைதானத்தில் இருந்து அம்பேத்கர் சிலை, முள்ளுவாடி கேட், ஆட்சியர் அலுவலக சாலை, பெரியார் மேம்பாலம் வழியாக சென்று மீண்டம் விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது. முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ரோகிணி பெண் குழந்தைகளை காப்பதற்கான தங்க மகள் அமைப்பின் லோகோவை வெளியிட்டார்.
Discussion about this post