தொழில் நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், 457 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சி தரும் செய்தி என்றார். இருப்பினும், ஜி.எஸ்.டியால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வருவதை அதிமுக அரசு திட்டவட்டமாக எதிர்ப்பதாகவும் இதன் மூலம் மக்கள் கடும் வரிசுமைக்கு ஆளாக நேரிடும் எனவும் ஜெயக்குமார் குறிப்பிட்டார். ஜி.எஸ்.டி குறித்து நடைபெறும் கூட்டத்தில் இதுகுறித்து தெரிவிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சுங்கசாவடிக்கும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் வருவதை அதிமுக எதிர்க்கும்
-
By Web Team

Related Content
"துச்சாதனர்கள், துரியோதனர்கள் விரைவில் அழிவார்கள்" - முன்னாள் அமைச்சர் காட்டம்!
By
Web team
August 14, 2023