புவனேஸ்வர் குமார் அசத்தல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

துபாயில் நடைபெறும் இன்றைய போட்டியை காண உலகம் முழுவதும் இரு நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

முன்னதாக இந்த போட்டியில் இந்திய அணியே வெற்றி பெறும் என புவனேஷ்வர் குமாரின் தந்தை நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்திய அணி பலமாக இருப்பதாகவும், இந்திய அணியின் வெற்றியில் புவனேஷ்வர் குமாரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதே போல் பாட்னா உள்ளிட்ட இடங்களில் இந்திய அணி வெற்றி பெற வேண்டி ரசிகர்கள் சிறப்பு பூஜைகள் நடத்தினர். 

 

லைவ் அப்டேட்ஸ் 

 

பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

16 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்தது பாகிஸ்தான் 

பஹான் சமான் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் 

புவனேஷ்வர் குமார் 4 ஓவரில் 2 விக்கெட்டை கைப்பற்றி அசத்தல்

 தற்போதைய நிலவரம்  28/2 (10.5)

 

 

 

Exit mobile version