உத்தரபிரதேச மாநிலத்தின் சாகரான்பூரை சேர்ந்தவர் அபிநந்நன் பதாக் . பிரதமர் நரேந்திர மோடியின் முகச் சாயலை ஒத்த தோற்றம் கொண்டவர் . இதனால் பாஜக் தனது தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்திக்கொண்டது. உ.பி உள்பட பல வடமாநிலங்களில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துள்ளார். இந்த நிலையில் இனி பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போவதில்லை என அபிநந்தன் அறிவித்துள்ளார்.
இவருடைய அறிவிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களுக்கு அரசாங்கத்தின் மேல் இருக்கும் கோபத்தைக் கண்டு தான் வெறுத்துவிட்டதாகவும், அதனால் இனிபாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போவதிலைல என்றும் அவர் கூறியுள்ளார்.
அதே நேரம் தனக்கும் மோடிக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார். மாறாக பாரதிய ஜனதா கட்சியுடன் தான் தனக்கு பிரச்சனை என கூறியுள்ளார்.
Discussion about this post