சென்னையில் பறக்கும் ரயிலை கவிழ்க்க மீண்டும் சதி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் தண்டவாளத்தில் கல்லை வைத்து பறக்கும் ரயிலை கவிழ்க்க மர்ம நபர்கள் மீண்டும் சதி வேலை செய்துள்ளனர். பெருங்குடி – தரமணி இடையே தண்டவாளத்தில் சிமெண்ட் கல்லை அடையாளம் தெரியாத நபர்கள் வைத்துள்ளனர்.
இதைப் பார்த்த ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உரிய நேரத்தில் தண்டவாளத்தில் கல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆகஸ்ட் 30ம் இதேபோன்று, மர்ம நபர்கள் தண்டவாளத்தில் கல்லை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பறக்கும் ரயிலை கவிழ்க்க மர்ம நபர்கள் சதி திட்டம் தீட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.