பட ரிலீசை தடுப்பதா? – விஷாலுக்கு கண்டனம்

 

விஜய் சேதுபதியின் 96 படத்தை வெளியியிடக்கூடாது என விஷால் மிரட்டியதாக தயாரிப்பாளர் சதீஷ்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் இன்று ரிலீஸாகியிருக்கும் படம் ‘96’. இந்தப் படத்தை, மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் நந்தகோபால் தயாரித்துள்ளார். படம் வெளிவருவதற்கு, நடிகரும் தயாரிப்பாளர் சங்கத்தலைவருமான விஷால் தடங்கல் செய்ததாக செய்திகள் வெளியானது.

‘கத்தி சண்டை’ படத்துக்காகத் தன்னுடைய சம்பளத்தை செட்டில் செய்தால்தான் படத்தை ரிலீஸ் செய்ய விடுவேன் என்று தயாரிப்பாளர் நந்தகோபாலிடம் விஷால் சொல்லியதாக தெரிகிறது.இதையடுத்து நடிகர் விஜய் சேதுபதி, ‘96’ படத்துக்காக வாங்கிய 3 கோடி ரூபாய் சம்பளத்தை விட்டுக் கொடுத்ததாகவும், அதுவும் போதவில்லை என்பதால் மேற்கொண்டு ஒரு கோடி ரூபாய் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பேசிய தயாரிப்பாளர் சதீஷ் குமார், ஒரு தலைவர் என்பவர் கலந்து ஆலோசித்து படத்தை ரிலீஸ் செய்யப் பார்க்க வேண்டுமே தவிர, இப்படி செய்வது அழகல்ல என கூறியுள்ளார். விஷாலின் இந்தச் செயல் மிகவும் கண்டனத்துகுரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version