தளபதி 64 -ல் விஜய்க்கு வில்லனாக மாறிய மாஸ் ஹீரோ யார் தெரியுமா?

தளபதி 64 திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகிவுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டிருக்கும் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில்.சமீபத்தில் ’தளபதி 64’ ’திரைப்படம் குறித்த அப்டேட்களும் வெளியாகியது.இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்க உள்ளார்.

 

மேலும் இப்படத்தினை பற்றிய மற்றொரு சுவாரஸ்யமான தகவலும் வெளியாகியுள்ளது.தளபதி 64 ல் விஜய்க்கு வில்லானாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளாராம்.

படத்தின் இயக்குநரான கனகராஜ் படத்தின் கதை பற்றி விஜய் சேதுபதியிடம் பேசிய போது,விஜய் சேதுபதிக்கு படத்தின் கதை பிடித்ததால் விஜய்க்கு வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழுவினர் வெளியிடவில்லை.மேலும், தளபதி 64 திரைப்படம் summer 2020-ல் வெளியாகும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். விஜய்-விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு அசத்தல் வேட்டையாக இப்படம் அமைய உள்ளது.

Exit mobile version