அங்கு தென்னை, கேழ்வரகு, முருங்கை, சோளம் உள்ளிட்ட பல்வேறு விவசாயங்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டுக்குள் இருந்த ஏராளமான குரங்குகள் அங்கு படையெடுத்துள்ளன. இவை விவசாய பயிர்களை முற்றிலும் சேதமாக்கி வருவதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தேங்காய் பிஞ்சுகளை பறித்து வீணாக்கும் குரங்குகள், சோளம் உள்ளிட்ட அனைத்து பயிர்களையும் கடித்து சேதமாக்குவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், குரங்குகளை அங்கிருந்து விரட்ட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post