தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறி வருகிறது. இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகார் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் புலன் விசாரணை தொடர்பான விவரங்களை கொண்ட ரகசிய அறிக்கையை நீதிபதி முன்பு சமர்பித்தார்.
பின்னர் முதலமைச்சருக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் எதுவும் இல்லை, டெண்டர் வழங்கியதில் எந்த முறைகேடு நடைபெறவில்லை என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, புகாருக்கு உள்ளான ஒப்பந்த நிறுவனங்கள், அதன் உரிமையாளர்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும் என்றார். இதற்கு அரசு தலைமை வழக்கறிஞர் கால அவகாசம் கோரியதை ஏற்ற நீதிபதி, விசாரணையை வரும் 26-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Discussion about this post