ரஷ்யாவில் 4-வது முறையாக அதிபர் பதவி வகித்துவரும் விலாடிமிர் புதினின் பதவிக்காலம் 2024ம் ஆண்டுடன் நிறைவடைகிறது. அந்நாட்டு அரசமைப்புச் சட்டத்தின்படி, ஒருவரால் 4 முறை மட்டுமே அதிபர் பதவியில் போட்டியிட முடியும். கடந்த ஜனவரி மாதம் புதின் பரிந்துரைத்த அரசியல் சாசன திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் 2 மணிநேர விவாத்திற்குப் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் புதிய திருத்தங்களை மேற்கொள்வதற்கான 24 பக்க பரிந்துரைகளை, சில தினங்களுக்கு முன்பு அவர் தாக்கல் செய்தார். அதிபர் புதின் 2024ம் ஆண்டு தேர்தலிலும் போட்டியிடுவதற்கு வழி ஏற்படுத்துவதற்கான திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என நாடாளுமன்ற துணைத் தலைவர் கோரிக்கை விடுத்தார். இதனை ரஷ்ய நாடாளுமன்றம் உடனடியாக ஏற்றுக்கொண்டது. அப்போது உரையாற்றிய புதின், தான் மீண்டும் போட்டியிடுவதற்கான அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை அரசியல் சாசன நீதிமன்றம் அங்கீகரித்தால், வரும் தேர்தலில் தன்னால் போட்டியிட முடியும் என தெரிவித்தார்.
Discussion about this post