உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள் பற்றாக்குறை காரணமாக ஏராளமான வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரையை ஏற்று நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த மத்திய அரசும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 லிருந்து 67 ஆகவும், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 62 லிருந்து 64 ஆகவும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு சட்டத்தில் வழிவகை செய்யும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுப்பட உள்ளது. இது தொடர்பான சட்டதிருத்த மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்து, நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளாதாகவும் கூறப்படுகிறது.
Discussion about this post