இந்தோனேஷியா நிலடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேஷியாவின் சுலேவேசியா தீவில் 7 புள்ளி 5 ரிக்டர் அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த தீவின் வடகிழக்கு பகுதியில் 56 கிலோ மீட்டர் தொலைவில், பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், வீடுகள் தரைமட்டமாகின.
ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி தாக்கியதால், கரையோர பகுதிகள் சேதத்தை சந்தித்துள்ளன. இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என்று கருதப்படுவதால், உயிர்ச்சேதம் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Discussion about this post