விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக எழுந்த புகாரில் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். மேலும், இந்த விவகாரத்தில் நிர்மலா தேவிக்கு உதவியதாக பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், முருகன் மற்றும் கருப்பசாமிக்காகவே மாணவிகளிடம் பேசியதாக பேராசிரியர் நிர்மலா தேவி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நியாயமாகவும், நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது. விரைவில் இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு கொண்டு வரப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிர்மலாதேவியின் பரபரப்பு வாக்குமூலம்…
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: உயர்நீதிமன்றம்சிபிசிஐடிநிர்மலா தேவி
Related Content
பப்ஜி மதன்: இரண்டு நாட்கள் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
By
Web Team
June 23, 2021
கிசான் திட்ட முறைகேடு : அரசு அதிகாரிகள் 100 பேர் பணியிடை நீக்கம்
By
Web Team
October 16, 2020
இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது - நீதிபதிகள் வேதனை!
By
Web Team
October 9, 2020
அக்டோபர் 31 ஆம் தேதி வரை மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை!
By
Web Team
October 5, 2020
சிறார்களைக் கேடயமாகப் பயன்படுத்தும் கிரிமினல் குற்றவாளிகள் - சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!
By
Web Team
October 3, 2020