நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கூடியது

மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அடுத்த மாதம் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. 18 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தொடரில், முத்தலாக் உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, புதிதாக 18 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்ற ஆளும் பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில்  பசுப் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்படும் தாக்குதல்கள், தலித்துகள் மற்றும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள், எஸ்.சி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்து போகச் செய்யும் முயற்சிகள் ஆகியவை குறித்து கேள்வி எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அத்துடன், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் முடிவு செய்துள்ளதாக மக்களவை காங்கிரஸ் எம்.பிக்கள் குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். இதனிடையே, ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காதததை கண்டித்து நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றக் கோரி தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

 

Exit mobile version