நடன நாயகன் மைக்கேல் ஜாக்சனின் பிறந்தநாள்

1958 ஆகஸ்ட் 29 ஆம் தேதி அமெரிக்காவின் இண்டியானா மாகானத்தில் பிறந்தவர் மைக்கேல் ஜாக்சன். ஆப்பிரிக்கா, அமெரிக்க தம்பதியருக்கு பிறந்த இவர் தனது 6 வயதில் பாப் இசையின் பயணத்தை தொடங்கினார். 14 வது வயதில் சொந்தமாக பாடல் எழுதி ஆல்பமாக வெளியிட்டார். தொடர்ந்து தனது சுய முயற்ச்சியில் எட்டி பிடிக்க முயிடாத புகழையும், பெருமையையும் சம்பாதித்தார். மேலும் அவர் வெளியிட்ட திரில்லர் என்ற ஆல்பம் உலகில் அதிக விற்பனை பெற்ற சாதனையை படைத்துள்ளது. உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான மைகேல் ஜாக்சன் போதை பழக்கத்தாலும், அறுவை சிகிச்சையால் ஏற்பட்ட மன அழுத்ததாலும் கடந்த 2009 ஆம் ஆண்டு அவர் காலமானார்.

Exit mobile version