தேனி மாவட்டத்தில் தொழில்திறன் பயிற்சி பெற்ற 236 பெண்களுக்கு பணி நியமன ஆணைகளை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.
உத்தமபாளையத்தில் உள்ள ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி மற்றும் மாவட்ட வேலைவாய்ப்புத் துறைகள் இணைந்து தனியார் வேலைவாய்ப்பு முகாமை நடத்தின. இதில் 8 முதல் 10-ம் வகுப்பு வரை படித்த 2,500க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
பயிற்சி பெற்றவர்களை 63 முன்னணி தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்தன. மாவட்ட வேலைவாய்ப்புத் துறையின் சார்பாக தொழில்திறன் பயிற்சி அளிக்கப்பட்டு வெற்றிகரமாக நிறைவு செய்த, 236 பெண்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. வருவாய் துறையின் சார்பில் கருணை அடிப்படையில் 7 பேருக்கு பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டன.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.கணேசன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.