50 சதவீத மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒப்புகைச் சீட்டு எந்திரத்தை இணைத்து ஆய்வு செய்ய வேண்டும் என 21 கட்சிகள் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்கும் ஒப்புகைச் சீட்டில் பதிவாகும் வாக்கும் ஒன்று தானா என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆய்வு செய்வது வழக்கம். ஆனால் வெறும் 10 சதவீதம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மட்டுமே இவ்வாறு சோதனை செய்யப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 50 சதவீத மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒப்புகைச் சீட்டு எந்திரத்தை இணைத்து ஆய்வு செய்ய வேண்டும் என 21 கட்சிகளின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, இது தொடர்பாக 25ம் தேதிக்குள் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டது.
Discussion about this post