தென்னை மரங்களை வேரூடன் விற்பனை செய்யும் விவசாயிகள்!

குடியாத்தம் பகுதிகளில் தென்னை மரங்களை வேருடன் விற்பனை செய்யப்படும்நிலை இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் அதிகளவில் தென்னை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தற்போது தென்னை மரம் விவசாயம் அழிந்து வரும் சூழல் இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து, தண்ணீர் பற்றாக்குறையால் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதன்காரணமாக தேங்காய் விளைச்சல் குறையத் தொடங்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், பல்வேறு இடங்களில் இருந்து சில நிறுவனங்கள், தென்னை மரங்களை விற்பனைக்கு வாங்கிக் கொள்வதாக தெரிவித்தால், மரங்களை விற்பனை செய்ய விவசாயிகள் தொடங்கியுள்ளனர். தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.750 முதல் ரூ.1,200 வரை தரம் பிரிக்கப்பட்டுள்ளது. 

ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மரங்களை வேருடன் எடுத்து செம்மண் மூலம் பதப்படுத்தி மீண்டும் நடப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version