திருச்சி அருகே இறந்த காளை மாடு, கிராம மக்கள் மரியாதையுடன் அடக்கம் !

ஜல்லிக்கட்டுக் காளை மீது அன்பு செலுத்தி தன் குடும்பத்தில் ஒருவரைப் போல் வளர்த்து வருகின்றார்களோ,அதே போன்று கம்பளத்து நாயக்கர்கள் மாடுகளை போற்றி வளர்த்து வருகின்றனர். அந்த மாடுகள் பெருமாள் சாமிக்கு நேர்ந்து விடப்படுகிறது. திருவிழாக்களில் நடைபெறும் எருது போட்டிகளில் பங்குபெறும் காளைகள் வெற்றி பெற்றால் அந்த மந்தைக்கே பெருமையாக பேசப்படுகிறது.

மணப்பாறை அடுத்த தொப்பம்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் 23 ஆண்டுகளாக காளை மாடு ஒன்றை வளர்த்து வந்தார். பெருமாள் சாமிக்கு விடப்பட்ட அந்த காளை, பல்வேறு இடங்களில் நடைபெற்ற எருது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றிகளை குவித்தது.

இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக அந்த காளை உயிரிழந்ததால், கிராமமே சோகத்தில் மூழ்கியது. இதையடுத்து காளை மாட்டை குளிப்பாட்டி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

கம்பளத்து நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் இறந்த காளைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் நாட்டுப்புற பாடல்களைப் பாடினர்.

இறந்த மாட்டிற்கு வாரிசாக கன்றுக்குட்டி ஒன்றை அழைத்து வந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். காளை மாடு இறந்த இடத்தின் அருகே கம்பளத்து நாயக்கர் சமூக மக்களின் தேவராட்டம் நடைபெற்றது.இதில் பலரும் கலந்து கொண்டு தேவராட்டம் ஆடினர்.

பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு, இறுதிச் சடங்கு நடைபெற்றது. 3 பெண்கள் மாட்டிற்கான அனைத்து இறுதிச் சடங்குகளையும் செய்தனர்.

சந்தனம், குங்குமம் பூசிய பின்னர் தானியங்களை தெளித்து காளையை அனைவரும் தொட்டு வணங்கினர். தாரை, தப்பட்டை, உருமி முழங்க காளையை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஊர்வாலமாக எடுத்துச் சென்றனர்.

மாட்டின் உரிமையாளர் பழனிச்சாமியின் நிலத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் காளைஅடக்கம் செய்யப்பட்டது. பின்னர் அந்த இடத்தில் இறுதிச் சடங்கு மற்றும் வாழிபாடு நடத்தப்பட்டது.

குடும்பத்தில் 23 ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட காளை மாடு இறந்ததை அடுத்து பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுத நிலையில், அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Exit mobile version