திமுக ஆட்சியில் 500 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்தது! – அமைச்சர் ஜெயக்குமார்

 

திமுக ஆட்சி காலத்தில் 500 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்ததாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீர் வீணாக கடலில் கலப்பதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியது முற்றிலும் தவறான தகவல் என்று தெரிவித்தார்.

தண்ணீரை சேமிக்கும் வகையில் அதிமுக அரசு தொலைநோக்கு பார்வையில் ஏராளமான செயல் திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக ஜெயக்குமார் கூறினார். அரசியல் ஆதாயம் தேடி தோல்வி அடைவது ஸ்டாலினின் ஒரே பணியாக இருப்பதாக அவர் விமர்சித்தார்.

 

Exit mobile version