தலித் என்றால் தகாத வார்த்தையா? மத்திய அரசின் விளக்கம் இது தான்!

ஐதராபாத்தில் 1940 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்டோர் இயக்கம் நடைபெற்றது. அப்போது அங்கு முதன்முதலில் ‘தலித்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த வார்த்தை பல இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தலித் என்ற வார்த்தையை பயன்படுத்த, குறிப்பிட்ட பிரிவினரிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சாதி ரீதியாக தங்களை வெளிப்படையாக அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பவில்லை என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் தலித் என்ற வார்த்தையை பயன்படுத்துவதில் தவறு இல்லை என மத்திய தகவல் ஒளிபரப்புதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கட்டுரைகள், மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களில் தலித் என குறிப்பிடலாம் எனவும் அறிவித்துள்ளது.

Exit mobile version