இலங்கை போரின்போது தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் ஒப்படைக்க இலங்கை ராணுவத்துக்கு அதிபர் சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் விடுதலை புலிகள் இயக்கத்துக்கும், ராணுவத்துக்கும் இடையேயான போர் 2009-ம் ஆண்டு முடிவடைந்தது. இந்த போரின் போது, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருந்த தமிழர்களின் நிலம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், தமிழர்களிடம் இருந்து ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலங்களை மீண்டும் தமிழகளிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அக்டோபர் 31-ம் தேதிக்குள் அனைத்து நிலங்களையும் ஒப்படைக்க வேண்டும் என ராணுவத்துக்கு இலங்கை அதிபர் சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.