தொழில் அதிபர்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பவியல் கொள்கை-2018 வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் பழனிசாமி, சீமென்ஸ் மற்றும் டிசைன் டெக் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து 546 கோடி மதிப்பீட்டில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட இருப்பதாக கூறினார்.
இவற்றின் மூலம் தொழில்நுட்பக் கல்வி உட்கட்டமைப்பை வலுப்படுத்துதல், தொழில் திறன்களை மாணவர்களிடையே மேம்படுத்துதல், வேலைவாய்ப்பை பெறுதலுக்கான திறனை அதிகரிக்கச் செய்தல், ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
தமிழகத்தை சேர்ந்த 191 மாணவர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி அளிக்கப்பட்டதை சுட்டிக் காட்டிய அவர், பின் தங்கிய மாவட்டங்களில் கல்லூரிகளை தமிழக அரசு தொடங்கி வருவதாக குறிப்பிட்டார்.
இதனால், உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் 48 புள்ளி 6 சதவீதம் உயர்ந்துள்ளதாக முதலமைச்சர் கூறினார்.