நீட் தேர்வு வினாத்தாள் குளறுபடி காரணமாக தமிழ் வழி நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் மனிந்தர் சிங், எந்த ஒரு பொது தேர்வையும் அனுமதிக்க கூடாது என்ற மனநிலையில், தமிழக அரசு இருப்பதாக குற்றம் சாட்டினார்.
மனிந்தர் சிங்கின் வாதத்தை குறுக்கிட்டு அதை ஏற்க மறுத்த உச்சநீதிமனற நீதிபதி நாகேஷ்வரா ராவ், கல்வி தொடர்பான விவகாரங்களில் தமிழக அரசின் மீதான இந்த குற்றச்சாட்டை தம்மால் ஏற்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
தமிழகத்தின் கல்வி கொள்கை குறித்து தனக்கு நன்றாக தெரியும் எனவும் அவர் கூறினார். நீட் தேர்வை தமிழக அரசு எதிர்பதற்கான காரணம் கிராமப்புற மாணவர்களின் கல்வியும், எதிர்காலமும் பாதிக்கப்படும் என்பதால் தான் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய நீதிபதி நாகேஷ்வரா ராவ், தமிழகத்தில் சிறந்த மாணவர் சேர்க்கை கொள்கைகள் உள்ளதாக தெரிவித்தார்.
Discussion about this post