சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதி மன்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்யகோரி, கன்னியாகுமரி மாவட்டத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
கேரளா மாநிலம் சபரிமலையில் உள்ள ஐய்யப்பன் கோயிலில், குறிப்பிட்ட வயது பெண்கள் வழிபாடு நடத்தத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்தத் தடையை ரத்து செய்து, கடந்த வாரம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால், சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பும் – வரவேற்பும் தெரிவித்தனர்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பினை மறுபரிசீலனை செய்யகோரி கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சந்திப்பில் இந்து அமைப்பினர் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது, கேரளா அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனையடுத்து, தடையை மீறி போராட்டம் நடத்திய நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.