பாஜக தேசிய செயற்குழு கூட்டம் கடந்த மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாய் மறைவையடுத்து, இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில், டெல்லியில் இன்றும், நாளையும் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள், கட்சியின் முக்கிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம், பட்டியல் இனத்தவருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், நாடாளுமன்றத்துக்கும் அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரேநேரத்தில் தேர்தல் நடத்துவது உள்ளிட்ட பிரச்சனைகள் பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், தெலங்கானா மற்றும் ஒடிசாவில் கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
டெல்லியில் பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டம்
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள்
- Tags: செயற்குழு கூட்டம்பாஜக
Related Content
பஞ்சாப் பாஜக தலைவரை விரட்டியடித்த விவசாயிகள்... மாநில காவல்துறை உடந்தையா?
By
Web Team
July 12, 2021
மத்திய அமைச்சர்கள் விரிவாக்கம் - புதிய அமைச்சர்கள் யார் யார்?
By
Web Team
July 7, 2021
பெண்களை தப்பாக பேசுவதே திமுகவின் கொள்கை - குஷ்பு குற்றச்சாட்டு!
By
Web Team
March 31, 2021
தொடர்ந்து 4வது முறையாக பீகார் முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ் குமார்!
By
Web Team
November 16, 2020
பீகாரில் சுமூகமாக முடிந்த ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. இடையேயான தொகுதிப் பங்கீடு!
By
Web Team
October 6, 2020