டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவதுதான் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம்

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் உயராத போதும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதாக கூறினார். அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவை நோக்கி செல்வதே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் என அவர் தெரிவித்தார். பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஜிஎஸ்டியில் கொண்டு வரப்பட்டால், அனைவரும் பயனடைவார்கள் என அவர் குறிப்பிட்டார். ஈரான், வெனிசுலா மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்காததும் விலையேற்றத்திற்கு காரணம் என தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

Exit mobile version