ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி முடித்துள்ளது. இந்தநிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜி.சி கில்னானி, அஞ்சன்டிரிகா, நிதிஷ் நாயக் ஆகியோர் ஆறுமுகசாமி ஆணையத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். அவர்களிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், ஜெயலலிதாவுக்கு தாங்கள் சிகிச்சை எதுவும் அளிக்கவில்லை என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேரும் மீண்டும் இன்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகினர். அவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தினர்.
ஜெ.வுக்கு சிகிச்சை எதுவும் அளிக்கவில்லை – எய்ம்ஸ் மருத்துவர்கள்
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆஜர்ஜெயலலிதா
Related Content
குழந்தைக்கு புரட்சித்தலைவி பெயர் சூட்டிய திண்டுக்கல் சீனிவாசன்!
By
Web Team
March 27, 2021
பீனிக்ஸ் பறவை வடிவில் கம்பீரமான நினைவிடம் - அதிநவீன வசதிகளுடன் ரூ.80 கோடியில் உருவாக்கம்!
By
Web Team
January 27, 2021
சாதனைகளை விளக்கும் ஜெயலலிதாவின் நினைவிடம்!
By
Web Team
January 27, 2021
தொண்டனைத் தலைவனாக்கி அழகுப் பார்க்கும் கட்சி - 49ஆவது ஆண்டில் அ.தி.மு.க!
By
Web Team
October 17, 2020
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படப்பிடிப்பு துவக்கம்
By
Web Team
September 5, 2019