டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற காந்தி பிறந்த நாள் விழாவில் பேசிய அவர், சுதந்திரத்தை விட துய்மையே முக்கியம் என காந்தி அறிவுறுத்தியதாகத் தெரிவித்தார்.
தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் காந்தியை கவுரவிப்பதாக கூறிய அவர், இந்தத் திட்டத்திற்காக அனைவரும் உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நாட்டை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் காந்தியை பெருமைபடுத்த முடியும் என்றார் அவர். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 98 சதவீத கிராமம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில், சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
25 மாநிலங்களும், 5 லட்சம் கிராமங்களும் திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லாதவையாக மாறியுள்ளதாக கூறிய பிரதமர் மோடி, தூய்மை இந்தியா திட்டத்தை முன்னெடுத்து செல்ல ஊடகங்கள் உதவியதாகவும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post