சீன ஒபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில், வோஸ்னியாக்கி, செவஸ்டோவாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
சீன ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டி பீஜிங்கில் நடைபெற்றது. இதில் உலக தரவரிசையில் இரண்டாம் நிலை வீராங்கனையும், டென்மார்க்கை சேர்ந்தவருமான வோஸ்னியாக்கி, லாத்வியாவை சேர்ந்த செவஸ்டோவாவை எதிர்கொண்டார்.
வோஸ்னியாக்கிக்கு செவஸ்டோவா அதிர்ச்சி அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில், 6 க்கு 3, 6 க்கு 3 என்ற என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினார்.