சீனா மீது அமெரிக்கா புதிய கட்டுப்பாடு

 

சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் 1 லட்சத்து 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரியை அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் உயர்த்தியுள்ளார். இதன்மூலம் 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சீன பொருட்களுக்கு சீனா கூடுதல் வரி கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு பதிலடியாக சீனாவில் இறக்குமதி செய்யும் 1 லட்சத்து 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கான வரியை சீனாவும் உயர்த்தி உள்ளது. இதனால் அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக பிரச்சனையில் வரும் நாட்களில் சுமூக தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் வரிகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version