சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு

இதன்படி, 5 ஆண்டுகள் வரையிலான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு 8.3 சதவீதத்திற்கு பதிலாக, 8.7 சதவீதம் வட்டி வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி ஒவ்வொரு காலாண்டின் போதும் அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் சேமிப்பு வைப்பு தொகைக்கான ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதமாகவே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிபிஎப் மற்றும் தேசிய சேமிப்பு சான்றிதழுக்கான ஆண்டு வட்டி விகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கிஸான் விகாஸ் பத்திர வட்டி விகிதம் 7.3 சதவீதத்தில் இருந்து 7.7 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது. பெண் குழந்தை சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரிதி திட்டத்தின் வட்டி விகிதம் 8.1 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கிஸான் விகாஸ் பத்திரம் நிறைவடையும் காலம் 112 மாதங்களுக்கு பதிலாக 111 மாதங்களாக குறைக்கப்படுகிறது.

Exit mobile version