சிபிஐயின் புதிய இயக்குநர் தேர்வு செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலைக் குழு டெல்லியில் இன்று கூடுகிறது. சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மத்திய அரசால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டது இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் மத்திய அரசின் உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில் அலோக் வர்மா மீண்டும் சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்றார்.
எனினும் பிரதமர் மோடி தலைமையிலான உயர்நிலைக் குழு கூடி, அலோக் வர்மாவை பதவி நீக்கம் செய்தது. இதேபோல சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவும் அண்மையில் சிபிஐ சிறப்பு இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து சிபிஐ-க்கு புதிய இயக்குநரை தேர்வு செய்ய பிரதமர் மோடி, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஆகியோர் அடங்கிய உயர்நிலைக் குழு டெல்லியில் இன்று கூடுகிறது.
இதில் சிபிஐயின் புதிய இயக்குநர் தேர்வு குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. புதிய சிபிஐ இயக்குநர் பதவிக்கு மொத்தம் 17 ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post